உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி நகர கிரிக்கெட் போட்டி அமிர்தாபுரம் அணி சாம்பியன்

திருத்தணி நகர கிரிக்கெட் போட்டி அமிர்தாபுரம் அணி சாம்பியன்

திருத்தணி, திருத்தணி நகராட்சி, 21 வார்டுகளில் உள்ள கிரிக்கெட் அணியினர் ஆண்டுதோறும் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் எம்.ஜி.ஆர். நகர் சார்பில் சாம்பியன்ஷிப் போட்டி திருத்தணி ஏரிக்கரை மைதானத்தில் கடந்த, மே 1ம் தேதி துவங்கியது.மொத்தம், 32 அணிகள் பங்கேற்று, நாக்அவுட் முறையில் வாரந்தோறும் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நடந்தது. இதில், 16 அணிகள் லீக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. இறுதி போட்டிக்கு திருத்தணி பெரியார்நகர், அமிர்தாபுரம் ஆகிய இரண்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டன.இந்த இரு அணிகளுக்கான இறுதிபோட்டி, நேற்று முன்தினம் நடந்தது. இதில் அமிர்தாபுரம் அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு திருத்தணி பீகாக் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீகிரண் பரிசு மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் திருத்தணி நகர அனைத்து கிரிக்கெட் அணியின் தலைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை