மேலும் செய்திகள்
அனல்மின்நிலைய தொழிலாளர்கள் போராட்டம்
21-Aug-2024
மீஞ்சூர: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர், வல்லுார் பகுதிகளில் வடசென்னை அனல்மின் நிலையம் ஒன்று மற்றும் இரண்டு, வல்லுார் அனல்மின் நிலையம், வடசென்னை - 3 ஆகியவற்றின் வாயிலாக, தினமும், 4,130 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.நிலக்கரி வாயிலாக மின் உற்பத்தி செய்யப்பட்டு, அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் அத்திப்பட்டு அடுத்த செப்பாக்கம், குருவிமேடு ஆகிய பகுதிகளில், தண்ணீருடன் கொண்டு வந்து குவிக்கப்படுகின்றன.தண்ணீர் வற்றிய பின், அவற்றை சாலை பணிகள் மற்றும் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மீஞ்சூர் - பொன்னேரி மாநில நெடுஞ்சாலை வழியாக, லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக குவித்து வைத்து கொண்டு செல்கின்றன.மேடு பள்ளங்களில் செல்லும்போது, இந்த 'ஓவர் லோடு' சாம்பல் கழிவுகள் சாலையில் சிதறுகின்றன. சாம்பல் கழிவுகள் சாலைகளில் குவிந்து, அதன் மீது மற்ற வாகனங்கள் செல்லும் சாலை புழுதிகாடாக மாறுகிறது.நேற்று காலையும், லாரிகளில் அதிக சுமையுடன் கொண்டு செல்லப்பட்ட சாம்பல் கழிவுகள், மீஞ்சூர் பஜார் பகுதியில் ஆங்காங்கே குவியல், குவியலாக சிதறின.அவற்றின் மீது அடுத்தடுத்து பயணித்த வாகனங்களால் சாம்பல் கழிவுகள் சாலையின் பல்வேறு பகுதிகளுக்கு பரவி, புழுதிக்காடாக மாறியது.இதே நிலை தொடர்ந்தால், வியாபாரிகள் கடையடைப்பு, மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்து உள்ளனர்.
21-Aug-2024