உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மது விற்ற இருவர் கைது

மது விற்ற இருவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், அரசு மதுக்கடைகள் திறக்கப்படாத காலை நேரத்தில், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், நேற்று ரோந்து பணி மேற்கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது, சுண்ணாம்புகுளம் மற்றும் சிந்தலகுப்பம் கிராம பகுதிகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த, எளாவூர் குமார், 39, சிந்தலகுப்பம் கார்த்திக், 32, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம், விற்பனைக்கு வைத்திருந்த, 58 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ