உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்சாரம் பாய்ந்து இரு கன்றுகள் பலி 

மின்சாரம் பாய்ந்து இரு கன்றுகள் பலி 

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, கங்காணிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வைதேகி, 36; இவருக்கு சொந்தமான, மாடுகளை, மேய்ச்சலுக்கு அவிழ்த்து விட்டார்.அதே கிராமத்தில் பன்னீர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், மேய்ந்துக் கொண்டிருந்தன. அப்போது, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த, இரு பசு கன்றுகள் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !