உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி விழா

வேணுகோபால் சுவாமி கோவிலில் உறியடி விழா

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலையில், ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. அந்த கோவிலில், 19ம் ஆண்டு, கிருஷ்ண ஜெயந்தி உற்சவ நிகழ்ச்சிகள் தொடர்ந்து, 10 நாட்களாக நடைபெற்று வருகின்றன.முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் உள்ள யாதவர் குடும்பத்தினர் சார்பில், உறியடி விழா நடைபெற்றது. உறியடி கண்ணனாக சிறப்பு அலங்காரத்தில், உற்சவ மூர்த்தி அருள் பாலித்தார். அதை தொடர்ந்து, சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் உறி அடித்து விழாவை கொண்டாடினர்.ஊத்துக்கோட்டை தட்டார தெருவில் உள்ளது சந்தான வேணுகோபால சுவாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை தொடர்ந்து நடைபெறும் உறியடி விழா, சுவாமி திருக்கல்யாணம், உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தாண்டு நேற்று முன்தினம் மதியம், கோவில் அருகே உறியடி விழா நடந்தது.இதில் இளைஞர்கள் கலந்து கொண்டு உறியடி பிடிக்கும் போது, சுற்றியிருந்தவர்கள் மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்ந்தனர். அன்று இரவு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், பஜனை குழுக்களுடன் கருட வாகனத்தில் ஊத்துக்கோட்டையில் உள்ள முக்கிய வீதிகள் வழியே வலம் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை