உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையில் கால்நடைகள் நெரிசலால் தவிக்கும் வாகனங்கள்

நெடுஞ்சாலையில் கால்நடைகள் நெரிசலால் தவிக்கும் வாகனங்கள்

திருவள்ளூர்:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், டோல்கேட் அருகில் கால்நடைகள் உலா வருவதால், தினமும் போக்குவரத்து பாதிக்கிறது.சென்னையில் இருந்து பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் இருந்து திருப்பதி, திருத்தணி செல்லும் வாகனங்கள், திருவள்ளூர் ஜே.என்.சாலை, கலெக்டர் அலுவலகம் வழியாக, திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கின்றன. திருவள்ளூர் பிரதான சாலைகளில், கால்நடைகள் சுற்றித்திரிவதால், அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சாலைகள், விவசாய நிலங்களில் கால்நடைகளை திரியவிட்டால், அவற்றை பறிமுதல் செய்து, கோசாலையில் ஒப்படைக்கப்படும்.மேலும், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இருப்பினும், இந்த எச்சரிக்கையை மீறி, திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், டோல்கேட் அருகில் தினமும் நெடுஞ்சாலையில் படுத்திருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வேகமாக வரும் வாகனங்கள், கால்நடைகளால் தடுமாறி விபத்திற்கு உள்ளாகி வருகின்றன. எனவே, திருவள்ளூர் கலெக்டர் நெடுஞ்சாலைகளில் உலா வரும் கால்நடைகளை பறிமுதல் செய்து, அவற்றின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை