பயன்பாடின்றி உள்ள அரசு கட்டடம் இடிக்கப்படுமா?
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் வளாகத்தில், வேளாண் துறை அலுவலகம் செயல்பட்டு வந்தது. வேளாண் துறைக்காக, கூடுதல் கட்டடம் ஒன்றும் அதே வளாகத்தில் செயல்பட்டு வந்தது.இந்த கட்டடம், 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாததால் இந்த கட்டடத்தின் பெரும்பாலான பகுதி இடிந்து விழுந்து உள்ளது.கான்கிரீட் தளம் ஆங்காங்கே அந்தரத்தில் தொங்கிக் கொண்டு உள்ளது. ஒன்றியத்தின் தலைமையிடமான பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தினசரி ஏராளமானோர் தங்களின் பல்வேறு அத்தியாவசிய பணிகள் காரணமாக வந்து செல்லும் நிலையில் இங்குள்ள ஆபத்தான கட்டடத்தால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.பகுதிவாசிகளின் பாதுகாப்பு கருதி, இந்த கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.