உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மேட்டுப்பாளையம் - அழிஞ்சிவாக்கம் சாலை வளைவுகளில் தடுப்பு அமையுமா?

மேட்டுப்பாளையம் - அழிஞ்சிவாக்கம் சாலை வளைவுகளில் தடுப்பு அமையுமா?

பொன்னேரி, பொன்னேரி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து சிறுவாக்கம், கங்கையாடிகுப்பம், அகரம், ஜெகநாதபுரம் கிராமங்கள் வழியாக, அழிஞ்சிவாக்கம் செல்லும் இதர மாவட்ட சாலையின் பல்வேறு இடங்களில் வளைவு பகுதிகள் உள்ளன.மேலும், வளைவு பகுதிகள் இருப்பது குறித்து, எந்தவொரு எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை. சாலையோரங்களில் உள்ள விவசாய நிலங்கள், தாழ்வான பகுதியில் அமைந்துள்ளன. சாலைக்கும், விவசாய நிலங்களுக்குமான உயரம், 3 - 5 அடி வரை சரிவாக உள்ளது.வளைவு பகுதிகளில் வேகமாக திரும்பும் வாகனங்கள், சாலையோர பள்ளங்களில் விழுந்து அவ்வப்போது விபத்தில் சிக்கி வருகின்றன. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.வளைவு பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் தடுமாற்றம் அடைகின்றனர். இச்சாலை பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மேட்டுப்பாளையத்தில் துவங்கி, அழிஞ்சிவாக்கத்தில் உள்ள சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது.இதனால் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கிறது.எனவே, சாலை வளைவு பகுதிகளில் இரும்பு தடுப்புகள், தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் ரிப்ளக்டர்கள் பொருத்த மாநில நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ