உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தாயை கடுமையாக தாக்கிய பெண் புகாருக்கு பயந்து தற்கொலை

தாயை கடுமையாக தாக்கிய பெண் புகாருக்கு பயந்து தற்கொலை

திருத்தணி:திருத்தணி அடுத்த, கீழாந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் லதா, 50. இவர், கணவரை பிரிந்து, அதே பகுதியில் உள்ள தாய் செல்வராணி, 71, என்பவர் வீட்டில் தங்கி வருகிறார். சில மாதங்களாக லதா, மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் மாலை, லதாவுக்கும், அவரது தாய் செல்வராணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த லதா, உருட்டை கட்டையால், தாயை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் இருந்த செல்வராணியை அப்பகுதி மக்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்நிலையில், நேற்று, காலை 7:00 மணி திருத்தணி, எம்.ஜி.ஆர்.நகர் அருந்ததிபாளையம் அருகே, ஒரு மரத்தில், லதா புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லதாவின் உடலை மீட்டனர்.தாயை தாக்கியதால் தன் மீது போலீசில் புகார் கொடுத்து விடுவார்கள் என, பயத்தில் லதா துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என, கிராமத்தினர் கூறுகின்றனர்.திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை