உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருள் கண்காட்சி

மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருள் கண்காட்சி

திருவள்ளூர், மகளிர் சுய உதவிக் குழுவினர் உற்பத்தி பொருள் விற்பனை கண்காட்சி பட்டாபிராம் இந்து கல்லுாரியில் நாளை 29 முதல் மூன்று நாட்கள் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களை கண்காட்சி வாயிலாக விற்பனை செய்து, அவர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைய பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருள் கண்காட்சி, நாளை 29-31 வரை, பட்டாபிராம் இந்து கல்லுாரியில் நடக்கிறது. இக்கண்காட்சியில் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் இதர மாவட்டத்தைச் சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்த, கைவினை பொருள், கைத்தறி, உணவு, பாரம்பரிய அரிசி, சிறுதானியம் மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருள், பனை ஓலை பொருட்கள் போன்றவை இடம்பெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 044- 27664528, 97873 68726 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை