மேலும் செய்திகள்
நாளைய மின்தடை: காஞ்சிபுரம்
06-Jul-2026
கும்மிடிப்பூண்டி, ஜூலை 18– கும்மிடிப்பூண்டி அருகே, மது போதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேந்திர மாலிக், 53. கூலி தொழிலாளி. ஆரம்பாக்கம் அருகே நாயுடுகுப்பத்தில் வசித்தபடி, ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, மது போதையில் இருந்த அவர், நாயுடுகுப்பம் – எகுமதுரை சாலையில் உள்ள பாலத்தில் இருந்து தவறி விழுந்தார். பாலத்தின் கீழ், இறந்த நிலையில் அவரது உடலை மீட்ட ஆரம்பாக்கம் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
06-Jul-2026