இரும்பு கம்பி விழுந்து தொழிலாளி பலி
திருமழிசை: திருமழிசை அடுத்த குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இளங்கோ என்பவர் கிராம வளர்ச்சிக்கான ஆராய்ச்சி நிறுவனம் வைத்துள்ளார் .அந்நிறுவனத்தில் இருந்த பழைய இரும்பு பொருட்கைளை எடுக்க நேற்று காலை 10:30 மணியளவில் அதே பகுதி யைச் சேர்ந்த அந்தோணி என்பவர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முரளி, 47, என்பவருடன் டாடா ஏஸ் சரக்கு வாகனத்தில்வந்துள்ளார். அப்போது வாகனம்அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், முரளி மீது இரும்பு கம்பி சரிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். வெள்ளவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.