உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை பொருள் விற்பனை செயலியில் புகார் அளிக்கலாம்

போதை பொருள் விற்பனை செயலியில் புகார் அளிக்கலாம்

திருவள்ளூர், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் குறித்து, 'DRUG FREE TN' என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:போதை பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக அரசால் 'DRUG FREE TN' என்ற 'மொபைல்' செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த செயலியை பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவியர் தங்களது மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்கள் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்பாடு புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டால், அது தொடர்பான விபரங்களை புகார்களாக, அந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம்.அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் புகார்தாரர் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகாரின் விண்ணப்ப எண்ணை வைத்து, அந்த புகாரின் மீது எடுத்த நடவடிக்கையின் விபரத்தையும் விண்ணப்பதாரர்கள் செயலியின் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி