உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 11 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

11 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடியில், நேற்று போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றை நிறுத்தி பயணியரின் உடமைகளை சோதனையிட்டனர்.அதில் பயணித்த ஓசூரைச் சேர்ந்த அருண் மேத்யூ ஹென்றி, 22, என்பவரிடம் இருந்து, 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 55,000 ரூபாய். இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !