உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 12 அங்கன்வாடி மையங்கள் திறப்பு

12 அங்கன்வாடி மையங்கள் திறப்பு

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், சூர்யநகரம், மத்துார், கிருஷ்ண சமுத்திரம், வீரகநல்லுார், அகூர், இஸ்லாம்நகர், தாடூர், பீரகுப்பம், எஸ்.அக்ரஹாரம் உட்பட 10 ஊராட்சிகளில், 12 அங்கன்வாடி மையங்கள், 1.62 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டிருந்தது. பல மாதங்களாகியும் திறப்பு விழா காணாமல் பூட்டியே கிடந்தது.இது குறித்த செய்தி, நம் நாளிதழில் படத்துடன் வெளியானதையடுத்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, திறக்கப்படாமல் இருந்த, 12 அங்கன்வாடி மையங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது.இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சந்தானம், ஒன்றிய பொறியாளர் தர்மேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ