உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 13 கிலோ கஞ்சா பறிமுதல் வங்கி கணக்குகள் முடக்கம்

13 கிலோ கஞ்சா பறிமுதல் வங்கி கணக்குகள் முடக்கம்

திருவள்ளூர்:ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரி, கார், வேன்களில் கஞ்சா கடத்தி வரப்பட்டது. காவல் துறையினரின் கெடுபிடியால், அரசு, தனியார் பேருந்து மற்றும் பயணியர் 'போர்வை'யில் ரயில்களில் கஞ்சா கடத்தி வருகின்றனர்.இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவின்படி எளாவூர், ஊத்துக்கோட்டை மற்றும் பொன்பாடி சோதனைச்சாவடிகளில், 24 மணி நேரமும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல், போதைப்பொருள் நடமாட்டத்தை கண்டறிய, மாவட்டம் முழுதும் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு, போதைப் பொருள் கடத்துபவர்கள் மற்றும் விற்பவர்களின் விபரங்களை சேகரித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் வாயிலாக அவர்களின் வங்கி கணக்கை முடக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்பே, தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனர். நான்கு நாட்களாக ரயில் நிலையங்களில் நடந்த சோதனையில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன், 25, என்பவரை கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல், திருவாலங்காடு ரயில் நிலையத்தில் 9 கிலோ கஞ்சா கடத்தி வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார், 19, நிர்மல்குமார், 26, சூர்யா, 28, ஆகிய மூவரை கைது செய்து, 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது வங்கி கணக்கை முடக்க, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை