புயல், மழையிலும் பாதுகாப்பாக 1,526 பிரசவங்கள்
சென்னை : 'பெஞ்சல்' புயல், கன மழையால் பாதித்த, சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், 1,526 பிரவச சிகிச்சைகளை, டாக்டர்கள் குழுவினர் பாதுகாப்பாக மேற்கொண்டுள்ளனர்.மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட அறிக்கை:நவ., 30ல், 'பெஞ்சல்' புயல் மற்றும் கன மழையின்போது, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில், போராடிக் கொண்டிருந்த கர்ப்பிணியரை, அரசு டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் முன்களத்தில் நின்று, 1,526 பிரசவ சிகிச்சைகளை பாதுகாப்பாக மேற்கொண்டுள்ளனர்.முன்கூட்டியே கர்ப்பிணியர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்தோம். அதன்படி, ஒவ்வொரு பெண்களுக்கும் தனித்தனியே சிகிச்சை வழிமுறைகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.