மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தியவர் கைது
15-May-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் தாலுகா போலீசார், திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், பட்டரைபெரும்புதுார் டோல்கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.அதில், அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ குட்கா இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு 34,700 ரூபாய். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து திருநின்றவூரைச் சேர்ந்த மனோஜானி, 40, என்பவரை கைது செய்து, குட்கா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
15-May-2025