மேலும் செய்திகள்
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை மணவாளநகரினர் அவதி
03-Feb-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலைக்கு மூலப்பொருளான இரும்பு தாதுக்கள், சென்னை துறைமுகத்தில் இருந்து, லாரிகள் வாயிலாக வருகிறது.நேற்று வந்த மூன்று லாரிகளில், இரும்பு தாதுக்களுடன், சிறிய ஜல்லி கற்களும் கலந்து இருப்பதை நிர்வாகம் கண்டறிந்தது.இது குறித்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசில் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த மூன்று லாரிகளின் டிரைவர்களான, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சேர்ந்த சுகுமார், 27, வேல், 31, விருதுநகர் மாவட்டம், திருச்சுளி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், 31, ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், சுமார் 20 - 30 டன் எடை இரும்பு தாதுக்களை வரும் வழியில் விற்றதுடன், இரும்பு தாதுக்களுக்கு பதிலாக, அதே அளவிலான ஜல்லி கற்களை கலந்தது தெரியவந்தது.வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், மூன்று லாரி டிரைவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
03-Feb-2025