மேலும் செய்திகள்
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
18-Oct-2025
மீஞ்சூர்: மீஞ்சூர் ஒன்றியத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள் வதற்காக, 35,000 மணல் மூட்டைகள், 'பொக்லைன்' இயந்திரம், ஜெனரேட்டர் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 55 ஊராட்சிகளில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தாழ்வான பகுதிகள் கண்டறிந்து, அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீர்நிலைகளில் ஏற்படும் கரை உடைப்பு, குடியிருப்புகளை மழைநீர் சூழ்வதை தடுப்பது ஆகியவற்றிற்காக, மெதுார் கிராமத்திலும், பி.டி.ஓ., அலுவலக வளாகத்திலும், 35,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. 'பொக்லைன்' இயந்திரங்கள், தண்ணீர் வெளியேற்றும் ராட்சத மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் பல்வேறு சாதனங்கள் அந்தந்த ஊராட்சிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் பெய்த கனமழையால், தடப்பெரும்பாக்கம், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பி.டி.ஓ., அதிகாரிகள், ஊராட்சி செயலர்கள் கிராமங்களில் முகாமிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
18-Oct-2025