உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று குரூப் - 4 தேர்வு 38,117 பேர் பங்கேற்பு

இன்று குரூப் - 4 தேர்வு 38,117 பேர் பங்கேற்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள குரூப் - 4 தேர்வில், 99 மையங்களில், 38,117 பேர் தேர்வு எழுத உள்ளனர்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-தொகுதி - ௪ பதவிக்கான தேர்வு, இன்று 12ம் தேதி நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும், 99 தேர்வு மையங்களில் உள்ள 126 தேர்வு கூடங்களில், 38,117 பேர் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் - விழுப்புரம் கோட்டம், திருவள்ளூர் மண்டலம் மூலமாக, கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பென்னலுார் பேட்டை, ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களுக்கு 85, மாநகர போக்குவரத்து கழகம் மூலமாக, 119 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ