உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை மாத்திரை கடத்திய 4 பேர் கைது

போதை மாத்திரை கடத்திய 4 பேர் கைது

திருத்தணி:மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் இருந்து போதை மாத்திரைகள் ரயில் மூலம் திருப்பதி வந்து, அங்கிருந்து சென்னைக்கு காரில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து திருவள்ளூர் எஸ்.பி., ஸ்ரீனிவாச பெருமாள் உத்தரவின்படி திருத்தணி பொன்பாடி சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை, 3:30 மணி அளவில் சிறப்பு எஸ்.ஐ., அரிகிருஷ்ணன் மற்றும் ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அப்போது திருப்பதி நகரத்தில் இருந்து சென்னை பதிவெண் கொண்ட வாடகை கார் ஒன்று திருத்தணி நோக்கி வந்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரில், நான்கு இளைஞர்கள் இருந்தனர். காரில் இருந்த பையில், 2,510 போதை மாத்திரைகள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், சென்னை மேற்கு தாம்பரம் திருநீர்மலை பகுதி சேர்ந்த தினகரன், 21, கமல், 20, சக்திவேல், 21 மற்றும் 17 வயது சிறுவன் என தெரிந்தது.அவர்கள் திருப்பதியில் இருந்து போதை மாத்திரைகளை சென்னைக்கு காரில் கடத்தி வந்துள்ளனர்.திருத்தணி போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை