உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பா.ஜ., பிரமுகர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

பா.ஜ., பிரமுகர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை

ஊத்துக்கோட்டை, வெங்கல் அருகே பா.ஜ., மாவட்ட பொருளாளர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், 40 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வெங்கல் அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிசதீஷ், 40; பா.ஜ., மாவட்ட பொருளாளர். இவர், மதுரையில் நடந்த இந்து முன்னணி மாநாட்டிற்கு சென்றிருந்தார். இவரது மனைவி, மகன்களின் படிப்பிற்காக சென்னையில் வசித்து வருகிறார்.இவருக்கு சொந்தமான வீடு விளாப்பாக்கம் கிராமத்தில் உள்ளது. இவரது சகோதரர் ரஞ்சித் கவனித்து வருகிறார். நேற்று காலை ரஞ்சித், வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது.இதுகுறித்து அரிசதீஷிற்கு தகவல் அளித்தார். அரிசதீஷ் வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த, 40 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்ச், 40,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.இதுகுறித்த புகாரின்படி, வெங்கல் போலீசார் நான்கு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !