உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,436 வழக்குகளில் தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,436 வழக்குகளில் தீர்வு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 4,436 வழக்குகளில், 26.81 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட தாலுகா நீதிமன்றங்களில் நேற்று நடந்தது. திருவள்ளூர் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஜூலியட் புஷ்பா துவக்கி வைத்தார். இதில், நிலுவையில் உள்ள உரிமையியல், மோட்டார் வாகன விபத்து, குடும்ப நலம், காசோலை, குற்றவியல் வழக்கு மற்றும் நிலுவையில் இல்லாத வங்கி வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது. மாவட்டம் முழுதும் 25 அமர்வுகள் ஏற்படுத்தி வழக்கு விசாரிக்கப்பட்டது. இதில், 8,670 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு, 4,436 வழக்குகள் முடிக்கப்பட்டு, 26.81 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ