மேலும் செய்திகள்
பணம் வைத்து சூதாட்டம் ஆறு பேர் அதிரடி கைது
20-May-2025
திருத்தணி, சின்னகடம்பூர் பகுதியில் பணம் வைத்து சீட்டு ஆடுவதாக எஸ்.பி.க்கு தகவல் கிடைத்தது.எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவின்படி தனிப்படை எஸ்.ஐ., குமார் தலைமையில் போலீசார் நேற்று சின்னகடம்பூர் ஏரிக்கரை பகுதியில் சோதனை செய்தனர். அங்கு பணம் வைத்து சூதாட்டம் ஆடிய குருவராஜப்பேட்டையை சேர்ந்த ராஜா, 35, ஸ்ரீகாளிகாபுரம் ஜெகதீசன்,33, பொன்னை புதுார் பச்சையப்பன்,35, திருத்தணி சிவா, 31, சோளிங்கர் பாலமுருகன், 40 ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 83,000 ரூபாய், 6 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
20-May-2025