மேலும் செய்திகள்
புதுச்சேரி மதுபாட்டில்கள் அனுமந்தையில் பறிமுதல்
24-Sep-2024
ஆவடி, : அம்பத்துார் அடுத்த கள்ளிக்குப்பம் அணுகு சாலையில் குட்கா விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்துார் போலீசார், புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், குட்கா விற்பனையில் ஈடுபட்டது, செங்குன்றம், கிராண்ட் லேண்ட் பகுதியைச் சேர்ந்த கண்ணன், 51, என தெரிந்தது. இவர், பெங்களூரில் இருந்து குட்கா கடத்தி வந்து, அம்பத்துார் சுற்றுவட்டார பகுதியில் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். இவர் மீது, கூடுவாஞ்சேரி, குன்றத்துார், கவரைப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில், குட்கா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
24-Sep-2024