மேலும் செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து 57 சவரன் நகை திருட்டு
25-Sep-2024
வியாசர்பாடி : வியாசர்பாடி, பொன்னையன் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 51; தி.நகரில் தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிகிறார்.இவரது மனைவி செல்வி; தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று இவரது இரு மகள்களும் கல்லுாரிக்கு சென்ற நிலையில், கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி வேலைக்கு சென்றனர்.மாரிமுத்துவின் தம்பி மணிகண்டன் இவரது வீட்டின் மேல் தளத்தில் வசித்து வருகிறார். நேற்று மாலை மாரிமுத்துவின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாரிமுத்துவிற்கு தகவல் தெரிவித்தார். பின், வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 57 சவரன் நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
25-Sep-2024