உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விளையாட்டு முதல்வர் கோப்பை மாநில போட்டி திருவள்ளூரில் 696 வீரர்கள் தேர்வு

விளையாட்டு முதல்வர் கோப்பை மாநில போட்டி திருவள்ளூரில் 696 வீரர்கள் தேர்வு

திருவள்ளூர்:மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்தில் 696 பேர் பங்கேற்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, செப்., 10 - 24ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வீரர்களில், முதல் இடத்தை 696 பேர் பெற்றனர்.மாவட்ட அளவில் முதலிடம் பெற்றோர், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டி, நேற்று முதல் துவங்கி, வரும் 24 வரை நடக்கிறது.இந்த போட்டிகள் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்துார், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறுகிறது-. மாநில அளவிலான போட்டியில் பங்கேற்போரை, கலெக்டர் பிரபுசங்கர் நேற்று வழியனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !