திருத்தணி கடைகளில் 70 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
திருத்தணி:தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்து 70 கிலோ கவர் பறிமுதல் செய்யப்பட்டது. திருத்தணி நகராட்சியில் பெரும்பாலான கடைகள், பூ, காய்கறி மார்க்கெட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், டம்ளர் போன்றவை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியம், மேற்பார்வையில், துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நேற்று அரக்கோணம் சாலை, சித்துார் சாலை மற்றும் சன்னிதி தெரு கடைகளில் திடீர் சோதனை செய்தனர். இதில், 70 கிலோ பிளாஸ்டிக் கவர், டம்ளர் போன்றவை இருந்ததை பறிமுதல் செய்தனர். மேலும், கடைகாரர்களுக்கு 6,000 ரூபாய் அபராதமும் விதித்தனர்.