மேலும் செய்திகள்
6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
13-Sep-2025
புகையிலை விற்ற 120 கடைகளுக்கு 'சீல்'
30-Aug-2025
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் துறையினர் திடீர் ஆய்வு நடத்தியதில், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 7.5 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், மளிகை, குளிர்பானம், ஓட்டல்கள், பூ, பழம், காய்கறி கடைகள் அதிகளவில் உள்ளன. இங்கு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்பட்ட கவர்கள், தட்டு, கப் ஆகியவை தாராளமாக புழக்கத்தில் இருந்தன. பேரூராட்சி நிர்வாகம் இதை கண்டும், காணாமல் இருந்தது. இதனால் இதன் புழக்கம் அதிகளவில் இருந்தது. இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் இளவரசி தலைமையில், 10க்கும் மேற்பட்ட குழுவினர் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர். பெரிய கடைகள், சிறிய கடைகள் என, 20க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்ததில், 7.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
13-Sep-2025
30-Aug-2025