மேலும் செய்திகள்
திரவுபதியம்மன் கோவில் வரும் 9ல் கும்பாபிஷேகம்
03-Feb-2025
திருத்தணி:திருத்தணி காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் நேற்று, காலை 9:30 மணிக்கு, மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.கோபுர விமானத்தின் மீது, கலச நீர் ஊற்றும் போது அதிகளவில் பெண் பக்தர்கள் பங்கேற்று, கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். அப்போது, கூட்ட நெரிசலில், திருத்தணி கச்சேரி தெருவைச் சேர்ந்த லோகநாதன் மனைவி ஜோதி, 55, என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த, 5 சவரன் தங்க செயின், பழைய சென்னை சாலை தமிழ்நாடு மின்சார வாரிய குடியிருப்பில் வசிக்கும், உமா, 45, என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த, 3 சவரன் தங்க செயின் ஆகிய இரு பெண்களிடம், மொத்தம், 8 சவரன் தங்கசெயினை மர்ம பெண்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.இது குறித்து, பாதிக்கப்பட்ட இரு பெண்கள் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடியவர்கள் குறித்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் வாயிலாக பார்த்தும் தேடி வருகின்றனர்.
03-Feb-2025