உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடியிருப்பு பகுதியில் புகுந்த 9 அடி மலைப்பாம்பு மீட்பு

குடியிருப்பு பகுதியில் புகுந்த 9 அடி மலைப்பாம்பு மீட்பு

திருத்தணி: திருத்தணி அருந்ததி காலனியில், வீடுகள் அருகே பதுங்கியிருந்த, 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை, தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர். திருத்தணி ஒன்றியம், சிறுகுமி ஊராட்சிக்குப்பட்ட பாகவாதபுரம் அருந்ததி காலனியில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (நவ.,26) காலையில், அருந்ததி காலனியில், இரு வீடுகள் இடையே, 9 அடிநீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கியிருந்ததை கண்டு, அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நான்கு தீயணைப்பு வீரர்கள், உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாம்பை பிடிக்க முயன்ற போது, வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்தது. பின் வீரர்கள், ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி, மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, சிறுகுமி அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ