தம்பி மனைவியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராசாத்தி, 30; இவர் கணவரின் வீட்டில் முதல் தளத்தில் வசித்து வருகிறார். கீழ் தளத்தில் கணவரின் அண்ணன் பூபாலன், 43, வசித்து வருகிறார்.நேற்று காலை, பூபாலன், முதல் தளத்தில் இருந்த ராசாத்தியின் அறைக்கு சென்று, அவரிடம் தகாத செயல்களில் ஈடுபட முயன்றார். தடுத்த ராசாத்தியை, பூபாலன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்த தலை மற்றும் மூக்கில் குத்தினார்.இதில், மயங்கி விழுந்த நிலையில், அருகில் வசிப்பவர்கள் ராசாத்தியின் தந்தைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அங்கு வந்த ராசாத்தியின் தந்தை, பூபாலனிடம் கேட்டபோது, அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.பலத்த காயம் அடைந்த ராசாத்தி, சோளிங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ராசாத்தி அளித்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.