உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயிலில் அடிபட்ட நபர் சிகிச்சை பலனின்றி பலி

ரயிலில் அடிபட்ட நபர் சிகிச்சை பலனின்றி பலி

திருவாலங்காடு:திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது, திருவாலங்காடு ரயில் நிலையம். இங்கு, கடந்த 1ம் தேதி தொழுதாவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் கிடப்பதாக, அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை மீட்டு திருவலங்காடு அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை