வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அறமில்லா துறைக்கு காசு ஒன்றே குறி-அலைக்கழிப்பு அடிப்படை ஆபத்துக்கால மீட்பு வசதி எதுவும் இருந்திருக்காது
திருத்தணி:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா தாலுகா, திம்மராஜபுரம்பேட்டை, சியாமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு, 38. இவர், நேற்று காலை, மகன் லக்சன், 13, என்பவருடன், தைப்பூசத்தையொட்டி, திருத்தணி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு, காஞ்சிபுரத்தில் இருந்து, பேருந்து வாயிலாக திருத்தணிக்கு வந்தார்.காலை 11:00 மணிக்கு, மலைக்கோவில் செல்வதற்கு தந்தை, மகனும் சன்னிதி தெரு வழியாக நடந்து சென்றனர். அப்போது பாபு, திடீரென மயங்கி விழுந்தார்.அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், பாபுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என, தெரிவித்தார்.இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அறமில்லா துறைக்கு காசு ஒன்றே குறி-அலைக்கழிப்பு அடிப்படை ஆபத்துக்கால மீட்பு வசதி எதுவும் இருந்திருக்காது