உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரியில் ஓட்டை, உடைசலுடன் உலா வரும் வட்டாட்சியர் வாகனம்

பொன்னேரியில் ஓட்டை, உடைசலுடன் உலா வரும் வட்டாட்சியர் வாகனம்

பொன்னேரி:பொன்னேரி வட்டத்தில், ஒன்பது குறுவட்டங்களும், 200க்கும் அதிகமான வருவாய் கிராமங்களும் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தின் மிகப்பெரிய தாலுக்காவாக இது அமைந்து உள்ளது.மீனவர் பகுதி, தொழில் நிறுவனங்கள், அனல் மின்நிலையங்கள், துறைமுகங்கள், விவசாயம் என பல்வேறு நிலைகளை கொண்ட வட்டமாக உள்ளது.இதனால், நாள்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் மக்கள் பிரச்னை இருந்துகொண்டே இருக்கும். பொன்னேரி வட்டாட்சியர் மற்றும் வட்ட நீதிபதி சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.இந்நிலையில், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக வாகனம் பழுதடைந்து ஓட்டை உடைசல்களுடன் உள்ளது. உடைந்த பகுதிகள் 'டேப்' போட்டு ஒட்டி வைக்கப்பட்டு உள்ளன. பொது இடங்களில் இந்த வாகனத்தை பார்க்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைகின்றனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மழை வெள்ளம், புயல் உள்ளிட்ட அவசர காலங்களில் அதிகாரிகள் இந்த வாகனத்தை நம்பி பயணிக்க முடியுமா என தெரியவில்லை. கடந்த லோக்சபா தேர்தல் நேரத்தில் மட்டும், கும்மிடிப்பூண்டி ஒன்றிய அலுவலக வாகனம் ஒன்று, பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது. அதுவும் தேர்தல் முடிவிற்கு பின், திரும்ப பெறப்பட்டது.தற்போது பழைய ஓட்டை, உடைசல் வாகனமே பயன்பாட்டில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை