உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திறப்பு விழா காணாத கழிப்பறை ரூ.5 லட்சம் வரிப்பணம் விரயம்

திறப்பு விழா காணாத கழிப்பறை ரூ.5 லட்சம் வரிப்பணம் விரயம்

புட்லுார்:திருவள்ளூர் ஒன்றியம் புட்லுார் ஊராட்சியில், 1,500 வீடுகளில், 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில், கடந்த 2018 - 19ல், மாநில நிதி ஆணையத்தின் நிதி ஒதுக்கீட்டில், ஆண், பெண்களுக்கு 5.25 லட்சம் மதிப்பில், சமுதாய கழிப்பறை கட்டப்பட்டது. இதற்காக, தண்ணீர் தொட்டி மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால், கழிப்பறை கட்டப்பட்டு நான்கு ஆண்டுகளாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.இதனால், கழிப்பறை சேதமடைந்தும், அதை சுற்றிலும் செடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. இதனால், அரசு பணம் வீணாகி வருவதாக, பகுதிவாசிகள் புகார் தெரிவித்தனர்.எனவே, சமுதாய கழிப்பறை மற்றும் அதை சுற்றியுள்ள செடிகளை அகற்றி, பயன்பாட்டிற்கு கொண்டு வர, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ