மேலும் செய்திகள்
தலையில் காயமடைந்த தாய் தள்ளி விட்ட மகன் கைது
17-Oct-2024
கும்மிடிப்பூண்டி:மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் உஷா, 39. இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் பகுதியில் தங்கி, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை, 10:00 மணிக்கு, புதுவாயல் பகுதியில் மேற்கண்ட தேசிய நெடுஞ்சாலையின் மீடியன்களில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டு இருந்தார். இதற்காக மினி டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வரப்பட்டிருந்தது.உஷா டேங்கர் லாரியின் முன்பகுதியில் நின்று பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சரக்கு ஏற்றி வந்த கனரக வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரியின் மீது மோதியது.இதில் டேங்கர் லாரி விபத்திற்கு உள்ளானதுடன், உஷாவின் மீதும் மோதியது. பலத்த காயம் அடைந்த உஷா சம்பவ இடத்திலேயே இறந்தார்.கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
17-Oct-2024