உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தாய் வீட்டிற்கு வந்த இளம்பெண் மாயம்

தாய் வீட்டிற்கு வந்த இளம்பெண் மாயம்

திருவாலங்காடு:கணவன் வீட்டில் இருந்து தாய் வீட்டிற்கு வந்த இளம் பெண் மாயமானார். திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் கிஷாந்திரிகா, 20. இவருக்கும் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்த சுதாகர், 28, என்பவருக்கும் கடந்த ஜூனில் திருமணம் நடந்தது. கிஷாந்திரிகா கடந்த 16ம் தேதி தாய் வீடான களாம்பாக்கம் வந்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் கிஷாந்திரிகாவை காணவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. கிஷாந்திரிகாவின் தந்தை மணிகண்டன் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் காணாமல் போனவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ