உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

திருவள்ளூர்; திருவள்ளூர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 42; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, லீலாவதி என்ற மனைவியும், நித்தின் என்ற மகனும் உள்ளனர். இவர், கடந்த 15ம் தேதி 'பஜாஜ் டிஸ்கவர்' இருசக்கர வாகனத்தில், திருவள்ளூர் - காக்களூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, எதிரே வந்த 'மாருதி எர்டிகா' கார் மோதியது. இதில், படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து, இவரது சகோதரர் பார்த்திபன் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ