உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரியன்வாயலில் ஆக்கிரமிப்பு ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

அரியன்வாயலில் ஆக்கிரமிப்பு ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

மீஞ்சூர்:மீஞ்சூர் - காட்டூர் சாலையில் உள்ள அரியன்வாயல் பகுதியில், காலை - மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் சாலையோர கடைகள் மற்றும் ஆட்டோக்கள் சாலையை ஆக்கிரமித்து இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இப்பகுதியில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் வாகனங்களும், சாலையில் நிறுத்தப்படுகின்றன.காலை - மாலை நேரங்களில் பணிக்கு மற்றும் பள்ளி செல்வோர், அரியன்வாயல் பகுதியை கடந்து செல்ல நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. கல்வி, மருத்துவம் மற்றும் பணி தொடர்பாக உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கிறோம்.இப்பகுதியில் உள்ள பேருந்து மற்றும் ஆட்டோ நிறுத்தத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவுபடுத்தினால் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். எனவே, போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர், அரியன்வாயலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை