உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விவசாய பணிகள் திருவாலங்காடில் மும்முரம்

விவசாய பணிகள் திருவாலங்காடில் மும்முரம்

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இங்கு களாம்பாக்கம், பாகசாலை, ஓரத்துார், கூளூர், மணவூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.இந்தாண்டு வடகிழக்கு பருவமழை கை கொடுத்த நிலையில், ஏரி, குளம், குட்டை, கிணறு உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.இதனால் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாசன விவசாயிகள், கார்த்திகை பட்டத்தில் நெல் நடவு செய்ய, தங்களது நிலங்களை மாடு கூட்டியும், டிராக்டர் வாயிலாக உழவு செய்து வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:கடந்தாண்டு அறுவடை காலத்தில் நீர் பற்றாக்குறை நிலவியது. இந்தாண்டு நீர்நிலை நிரம்பி உள்ளதால், திருப்தியுடன் பணியை ஆரம்பித்து உள்ளோம். இந்த பருவத்தில் ஒவ்வொரு முறையும் ஒன்றியத்தில் 1,200 ஏக்கர் நெல் பயிரிடப்படும்.இந்த முறை கூடுதலாக 300 ஏக்கர் பயிரிட நிலம் தயார் செய்யப்படுகிறது. விதை, உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அதிகாரிகள் வழி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி