மேலும் செய்திகள்
'பீச்' வாலிபால் போட்டி; ஸ்ரீ ராமகிருஷ்ணா வெற்றி
10-Sep-2025
சென்னை, சென்னை வருவாய் மாவட்ட எறிபந்து போட்டியில், 17 மற்றும் 14 வயது பிரிவுகளில், ஆலந்துார் மண்டலம், வியாசா பள்ளி முதலிடம் பிடித்தது. பள்ளி கல்வித்துறையின் குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. முதல்கட்டமாக, குறுவட்ட அளவிலான போட்டிகள் நிறைவடைந்த நிலையில், சென்னை வருவாய் மாவட்ட அளவில் போட்டிகள் நடக்கின்றன. அதன்படி, வருவாய் மாவட்ட மாணவருக்கான எறிபந்து போட்டி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி சார்பில், கீழ்ப்பாக்கத்தில் நடக்கிறது. இதில், 14, 17 மற்றும் 19 வயது பிரிவினருக்கு, தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. மூன்று பிரிவிலும், தலா 23 குறுவட்ட அளவில் வெற்றி பெற்ற அணிகள் பங்கேற்றன. அந்த வகையில், 19 வயது பிரிவில், சூளைமேடு, செயின்ட் வின்சன்ட் பள்ளி, 2 - 0 என்ற நேர் செட் கணக்கில், மேற்கு மாம்பலம் ஜெய்கோபால் ஹிந்து வித்யாலயா அணியை தோற்கடித்து, முதலிடத்தை பிடித்தது. மூன்றாம் இடத்தை ஆலந்துார் ஜி.கே., செட்டி பள்ளி கைப்பற்றியது. அதேபோல், 17 வயது பிரிவு இறுதிப் போட்டியில், ஆலந்துார் வியாசா வித்யாலயா பள்ளி முதலிடத்தையும், தேனாம்பேட்டை பி.எஸ்., பள்ளி இரண்டாமிடத்தையும், வேளச்சேரி அன்னை வேளாங்கண்ணி பள்ளி மூன்றாம் இடத்தையும் வென்றன. அடுத்து, 14 வயது பிரிவில், ஆலந்துார் வியாசா பள்ளி முதலிடத்தையும், கோடம்பாக்கம் ஜெய்கோபால் ஹிந்து வித்யாலயா இரண்டாமிடத்தையும், தேனாம்பேட்டை பி.எஸ்., பள்ளி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின. மாணவியருக்கான போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
10-Sep-2025