உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மதுபாட்டில் கடத்தியவர் கைது

 மதுபாட்டில் கடத்தியவர் கைது

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் சிவாடா பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில், மதுவிலக்கு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து சிவாடா நோக்கி பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். வாகனத்தில், ஆந்திர மாநில 20 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து, என்.என்.கண்டிகையைச் சேர்ந்த வெங்கடேசன், 47, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை