மேலும் செய்திகள்
உணவு இடைவேளையில்அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்
03-Apr-2025
பாகிஸ்தானியர்கள் வெளியேற கெடு | Breaking News
23-Apr-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தி, சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, அனைத்து துறை அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தலைகவசம் அணிந்து வரவேண்டும்.மேலும், அனைத்து துறை அரசு ஊழியர்கள், அலுவலர்கள் தலைகவசம் அணிந்து வருவதை அந்தந்த துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வரும் அரசு ஊழியர் மற்றும் அலுவலர் மீது, சாலை பாதுகாப்பு விதிகளின்படி காவல் துறை வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
03-Apr-2025
23-Apr-2025