உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் ரவுண்டானா அமைக்க பழமையான அரச மரம் அகற்றம்

திருவள்ளூரில் ரவுண்டானா அமைக்க பழமையான அரச மரம் அகற்றம்

திருவள்ளூர்; சென்னை, காஞ்சிபுரம், ஆவடி பகுதியில் இருந்து திருப்பதி, திருத்தணி, ஊத்துக்கோட்டை செல்லும் வாகனங்கள் அனைத்தும், ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக கலெக்டர் அலுவலகத்தை கடந்து செல்கின்றன. மாவட்ட பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள, 'டோல்கேட்' பகுதியில், நான்கு சாலைகள் சந்திப்பு அமைந்துள்ளது.இந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலை குறுகலாக உள்ளதால், கனரக வாகனங்கள் திரும்புவதற்கு சிரமப்படுகின்றன. நான்கு சாலை பிரியும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ரவுண்டானா அமைக்கும் பணி, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.இதற்காக, மருத்துவக் கல்லுாரி மற்றும் ஊத்துக்கோட்டை சாலையில், மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி முடிந்ததும், நான்கு சாலைகளிலும், 'டிவைடர்' அமைத்து, நடுவில் ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது.நான்கு வழியிலும் சாலை அகலப்படுத்தப்பட்டு, இடையூறாக இருந்த மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மருத்துவ கல்லுாரி செல்லும் வழியில் உள்ள நுாற்றாண்டு பழமை வாய்ந்த அரச மரமும் அகற்றப்பட்டுள்ளது. இப்பணி முடிந்ததும், இச்சாலை சந்திப்பில் நெரிசல் வெகுவாகக் குறையும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி