மேலும் செய்திகள்
அவசர சிகிச்சை பிரிவில் இரு தரப்பினர் தாக்குதல்
25-May-2025
திருவள்ளூ:வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு ஆதரவற்ற, கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் 2022- - 2023ம் நிதியாண்டில் துவக்கப்பட்டது.இத்திட்டத்தில் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட, காயமடைந்த, தெருவில் சுற்றித் திரியும் பிராணிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தல், அவசர சிகிச்சை ஊர்தி கொள்முதல் செய்தல் மற்றும் விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுதல் ஆகிய பணிகளுக்காக நிதி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற்ற தேவந்தவாக்கம் ஸ்ரீகோகுலகிருஷ்ண கோசாலா தொண்டு நிறுவனம், 8 லட்சம் ரூபாய் அரசு மானியத்துடன், 16.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அவசர சிகிச்சை ஊர்தி சேவை, திருவள்ளூர் மாவட்டத்தில் துவக்கப்பட்டது.இந்த அவசர ஊர்தியின் சேவையை கலெக்டர் பிரதாப் நேற்று துவக்கி வைத்து, ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட, காயமடைந்து சுற்றித்திரியும் பிராணிகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும், கோசாலாவிற்கு அழைத்துச் செல்லவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் ஜெயந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
25-May-2025