இசைவாணி மீது மேலும் ஒரு வழக்கு
திருவள்ளூர்:சுவாமி அய்யப்பன் குறித்து அவதுாறு பாடலை பாடி வெளியிட்ட கானா பாடகி இசைவாணி மீது, நேற்று காலை திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில், திருவள்ளூர் மாவட்ட ஹிந்து முன்னணி மற்றும் அய்யப்ப பக்தர்கள் பாதுகாப்பு குழுவினர் மனு அளித்தனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் வினோத் கண்ணா மற்றும் அய்யப்ப பக்தர்கள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் ஆகியோர், நகர காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் என்பவரிடம் மனு அளித்தனர்.