மேலும் செய்திகள்
கஞ்சா பறிமுதல் மூவருக்கு சிறை
26-Mar-2025
திருமழிசை:திருமழிசை பகுதியில் எபி என்ற எபனேசர், கடந்த 2024 செப்டம்பர் மாதம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மண்ணுார் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார்.இதற்கு பழிக்குப் பழியாக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய ஏழு பேரில் லோகேஷ்வரன், 22, ராபர்ட் கிருபாகரன், 25, ஹரிசுதன், 21, ஆகிய மூவரை, கடந்த 15ம் தேதி இரவு பூந்தமல்லி உதவி கமிஷனர் தலைமையில், வெள்ளவேடு போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய நான்கு பேரை தேடி வந்த நிலையில், நேற்று திருமழிசையைச் சேர்ந்த கவியரசு, 26, என்பவரை வெள்ளவேடு போலீசார் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
26-Mar-2025