உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  முதல்வர் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

 முதல்வர் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

திருவள்ளூர்: முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, உயர்கல்விக்கு நிதியுதவி பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் சட்டக் கல்லுாரிகளில் ஒற்றை சாளர முறையில் சேர்ந்துள்ள முதல் பட்டதாரி ஏழை, எளிய மாணவ - மாணவியருக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகை பெற தகுதியுடைய மாணவ - மாணவியர், அருகே உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், தமிழகத்தில் வசிப்பவர் என்பதற்கான நிரந்தரச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றுடன் வி ண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை